திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு. திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுக வேட்பாளர் சரவணன், திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சரவணன் தொடர்ந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வழக்கை சுட்டிக்காட்டி தேர்தலை அறிவிக்காதது தவறு என நீதிபதி கூறியுள்ளார்.