அனுமதி பெற்றுத்தான் ஜெராக்ஸ் மிஷின் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

மக்களவை தேர்தலுக்கான இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களின் முடிவுகளும் வெளியாக உள்ளது. திருப்பரங்குன்றம் வாக்குப்பதிவு எண்ணும் மையத்திற்கு ஜெராக்ஸ் மிஷின் கொண்டுசெல்லப்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான நடராஜன், ‘உரிய அனுமதி பெற்றுதான் திருப்பரங்குன்றம் வாக்கு எண்ணும் மையத்திற்கு ஜெராக்ஸ் மிஷின் கொண்டு செல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கமானதே.’ என குறிப்பிட்டார். DINASUVADU

நான் கூறியது சரித்திர உண்மை! திருப்பரங்குன்றத்தில் கமல் பேச்சு!

அரவக்குறிச்சியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கமலஹாசன் பேசிய போது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே!’ எனக்கூறியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைக்குள்ளானது பாஜக மற்றும் அதிமுகவினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் கமல்ஹாசன் மீது புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் இன்று பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ‘யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. ஆனால், சரித்திர … Read more