கடந்த 2ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முதல் அதே பகுதிகளில் நிலவுகிறது. மேலும், 2ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று முதல் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அது மட்டும் இல்லாமல், ஓரிரு இடங்களில் அதிகாலை […]
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும், நாளை மறுநாள் (31.12.2023) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனை தொடர்ந்து 01.01.2024 மற்றும் 02.01.2024 தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 31-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை மற்றும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைப்போல அதற்கு அடுத்த தினங்களான 29,30 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், […]
தேர்தல் ஆணை விதி முறைகளை மீறி அதிக அளவில் செலவு செய்ததால் நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும், என்று சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஷில்பா பிரபாகர் சதிஷியிடம் நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜா நாராயணன், சுயேட்சை வேட்பாளர்கள் எம்.சங்கரசுப்ரமணியன் , பி.பாலமுருகன், சிஎம்.ராகவன், எஸ்.மாரியப்பன், வி.திருமுருகன், சுதாகர் பாலாஜி, வி.ராஜிவ் விக்டர் ஆகியோர் மனு அளித்த […]
நெல்லை மாவட்ட ஆட்சியர் தனது பெண் குழந்தையை அங்கன்வாடி பள்ளியில் சேர்த்திருப்பது, அரசு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஸ் கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இவர், பாளையங்கோட்டையில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில், தனது இரண்டரை வயது மகளான கீதாஞ்சலியை சேர்த்துள்ளார். பொதுவாக வசதி படைத்தவர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து வரும் சூழ்நிலையில், மாவட்ட ஆட்சியரின் குழந்தை […]
தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றனர். நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர் சார்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. ஐந்து வகையான தலைப்புகளில் 1 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஓவியப்போட்டியில் பங்கேற்றனர். பாதுகாப்பான உணவு, சத்தான மற்றும் செறிவூட்டப்பட்ட உணவு, உணவை வீணாக்காதீர்கள் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவ மாணவியர்கள் தங்கள் கற்பனைத் திறனை கொண்டு ஓவியங்களை வரைந்தனர். வெற்றி […]
நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம். திருநெல்வேலி மாவட்டத்தில் திருமங்கலத்தில் இருந்து, கொள்ளம் வரை நான்கு வழிச்சாலை அமையவுள்ளது.இந்த திட்டத்திற்க்காக மக்களிடமிருந்து விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர், சிவகிரி, புளியங்குடி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் சுமார் 2000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு […]
நெல்லை பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலித்து ஏமாற்றிய பெண்ணை, இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வள்ளியூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் மெர்சி என்ற பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் என்ற இளைஞரும் பணியாற்றி வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரவீந்திரன் வேலையில் இருந்து நின்றுவிட்டதால், மெர்சி வேறு ஒரு நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திரன், மெர்சியை வள்ளியூர் பேருந்து நிலையத்தின் அருகில் வரவழைத்து கத்தியால் […]
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய தினத்தையொட்டி பழங்கால நாணய கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த மூவேந்தர் முத்திரைக் காசுகளும், பெருவழுதி நாணயம், செழியன் காசு போன்ற பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் உள்பட பல்வேறு வகையான நாணயங்கள், காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் கண்காட்சியை கண்டு பயன் பெற அனைத்து பள்ளிகளுக்கும் அரசு அருங்காட்சியம் சார்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.ஆங்கிலேயர் காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துறை ஆங்கிலேயரால் […]
உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை குறைக்க கோரியும் , தமிழில் தேர்வு எழுதும் நடைமுறையை மாற்றம் செய்ததை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணை வேந்தர் பாஸ்கர் தொடர்ந்து மாணவர்கள் விரோத போக்குகளை கடைப்பிடித்து வருவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டினார்.பருவ தேர்வு வரும் 6 மாதங்களுக்கு ஒருமுறை எதாவது ஒரு பெயரை சொல்லி கட்டணத்தை உயர்த்தி வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.இந்நிலையில் இந்த பருவத்தேர்வுக்கு வருகைப்பதிவேடு குறைந்தால் தனித்தனியே பாடங்கள் அடிப்படையில் […]
ஆலங்குளத்தில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பிளஸ்-2 மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஆலங்குளம் அண்ணாநகரை சேர்ந்த 17 வயது மாணவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.இவரும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியும் காதலித்து வந்தனராம். சம்பவத்தன்று மாணவர் பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில், மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றாராம். அங்கு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக மாணவர் […]
நெல்லை உடையார்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். தனியார் நிறுவன ஊழியரான இவர் நகைகள் செய்து விற்பனை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு சுரேஷ்குமார் நண்பர்களுடன் நெல்லை மணிமூர்த்தீசுவரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பகுதிக்கு சென்றார்.அங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, அவர்கள் மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் அவர்கள், ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது அங்கு திடீரென 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள், சுரேஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அந்த […]
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முதல் மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளது.உடனே பாளையங்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் தகவல் அறிந்து விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செய்வதை கண்டித்து மதுரையில் சாலை மறியல் போராட்டம் செய்த எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக,திக,விசிக,கம்யூனிஸ்ட்,நாம் தமிழர் போன்ற பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நுழைவதை கண்டித்தும், அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தலைவர்களின் கைதை கண்டித்தும் […]
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன்,திருமாவளவன்,சீமான்,திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும்,சாலை மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலியில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாளை பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட திமுக வினரை […]
நெல்லை பேட்டையில் 2016 ஆம் ஆண்டு தருன்மாதவ் என்ற சிறுவனை கொலைச்செய்த குற்றவாளி ஆறுமுகத்திற்க்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை பேட்டையில் 2016 ஆம் ஆண்டு தருன்மாதவ் என்ற சிறுவனை கொலைச்செய்த குற்றவாளி ஆறுமுகத்திற்க்கு தூக்கு தண்டனை மற்றும் 5 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதிப்பு மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.செங்கோட்டை அருகே பாறைப்பட்டி என்ற பகுதியில் போலீசாரால் கைது […]