சென்னை: திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி காடுகளில் சுமார் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அங்கு தனியார் நிறுவனங்கள் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்தக் குத்தகை காலம் 2028ஆம் ஆண்டு முடிவடைகிறது. மாஞ்சோலை சுற்றியுள்ள பகுதியில் பல்வேறு இடங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தோட்டங்களில் பணியாற்றி வந்தனர். இப்படியான சூழலில், தனியார் நிறுவனங்கள் தங்கள் குத்தகை காலத்தை முன்னதாவே முடித்துக்கொண்டு, அங்கு வேலை பார்த்து […]
அண்டை நாடான இலங்கையில் மே 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பலியான தமிழ் ஈழ மக்களுக்காக 10 ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ‘மே 17’ இயக்க தலைவர் திருமுருகன் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்நிலையில் இவர் மீது போலீசார் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசியதாகவும்,விதிகளை மீறி பேசியதாகவும் கூறி இரண்டு பிரவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். DINASUVADU
தனது திறமையான நடிப்பின் மூலமும், நக்கலான மேடை பேச்சுக்கள் மூலமும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் பாகுபலி 1&2 திரைப்படத்தில் சத்யராஜ் ஏற்று நடித்த கட்டப்பா கதாபாத்திரம் இந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார். இவர் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படத்திற்கு ‘தீர்ப்புகள் விற்க்கப்படும்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நேற்று மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி இப்பட தலைப்பை அறிவித்தார். source : cinebar.in
“தீர்ப்புகள் விற்கப்படும் “பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் திருமுருகன் காந்தி நடிகர் சத்யராஜ் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டார். நடிகர் சத்யராஜ் நடிக்கும் படத்துக்கு ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர் படக்குழுவினர்.இந்த படத்தை தீரன் இயக்குகிறார். படத்துக்கு ‘கருட வேகா’ என்ற தெலுங்குப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஆஞ்சி என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் எஸ்.என்.பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். சரத் என்பவர் எடிட் செய்கிறார் என்று […]
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என கண்டனத்தை தெரிவித்த மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி பதிவிட்டுள்ளார். அதில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட அதிமுக அரசை நீதிமன்றம் கண்டித்தும், வேண்டுமென்றே மற்றொரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது! மக்களின் உரிமைக்குரலை பூட்ஸ் காலால் நசுக்குவது நல்லதல்ல! என்று பதிவிட்டுள்ளார். […]