திருமூர்த்தி அணையின் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் உபரி நீர் திறக்க வாய்ப்பு இருப்பதால் பாலாற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பருவமழையை தாண்டி பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.