“இந்து என்பது மதம் அல்ல; வாழ்வியல் நெறி” எனஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தபின் இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதுவரையில் இந்தியாவில் துணை குடியரசு தலைவர்கள் யாரும் இப்படி ஒரு தனிப்பட்ட மதத்தினை பற்றி பேசியதே கிடையாது.இப்போதுதான் முதல் முறையாக வெங்கையா நாயுடு பேசியுள்ளார். மதச்சார்பற்ற இந்தியாவை இது கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது.
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் கவனித்து வருகிறது. தேவஸ்தானத்தின் பல்வேறு பிரிவுகளில், ஹிந்து அல்லாத பிற மதத்தை சேர்ந்த பலர், பணியாற்றுவதாகவும், அவர்கள், மத மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. திருமலை கோவில் விதிமுறைகளின்படி, ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, கோவிலில் பணியாற்ற முடியும். ஆனால், அந்த கோவிலில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர், தன் அதிகாரப்பூர்வ காரில், தினமும், திருப்பதியில் உள்ள சர்ச்சுக்கு சென்று […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. இன்று முதல் பக்தர்கள் கூண்டில் அடைபடாமல் ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்கான டோக்கன் பெற ஆதார் கட்டாயம் என கோவில் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.