மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்தையொட்டி சன்னதியில் உள்ள கம்பத்தடி மண்டபம் அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பட்டர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். சித்திரை திருவிழாவிற்காக காப்பு கட்டிய பட்டர்கள் காலை 10 மணியளவில் 66 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடிப் பட்டத்தை ஏற்றினார். பின்பு கொடிமரத்திற்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் […]