“பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கும்போது, ஜூனியர்-சீனியர் என்ற வித்தியாசம் தெரியவில்லை” என்று நடிகை திரிஷா கூறினார். சென்னை, திரிஷாவும், விஜய் சேதுபதியும் முதல் முறையாக, ‘96’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பிரேம்குமார் டைரக்டு செய்து இருக்கிறார். நந்தகோபால் தயாரித்து இருக்கிறார். படம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது. அதில் திரிஷா, விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி […]