கொரோனா பரிசோதனை செய்வதற்கான ஆர்.டி. பி.சி.ஆர் மருத்துவ சாதனங்களை பூட்டான் அரசுக்கு இந்தியா வழங்கியது. இதுகுறித்து இந்திய தூதரகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதில், தனது நெருங்கிய நண்பரும், அண்டை நாடுமான பூட்டானுடன் இந்தியா நிற்கும் என்ற பிரதமர் மோடியின் உறுதிமொழியைக் கருத்தில் கொண்டு 20,000 சோதனைகளுக்கான COVID-19 RT-PCR சோதனைக் கருவிகளை திம்புவில் உள்ள இந்திய தூதரகம் பூட்டான் ராயல் அரசிடம் ஒப்படைத்தது. இந்த ஆர்டி-பி.சி.ஆர் சோதனை கருவிகளை வழங்குவது […]