கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற, சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொள்ளையர்களால் சுடப்பட்டு வீர மரணமடைந்தார். நேற்று சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு காவல்துறையினர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, சொந்த ஊரான சங்கரன் கோவிலுக்கு அருகே உள்ள சாலைப்புதூரில் அவரது உடல் நேற்று நள்ளிரவு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெரிய பாண்டியனின் உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.