முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய சசிகலா. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ள நிலையில், இன்றே மரியாதை […]
முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 -வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி ராமநாதபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது .1979-ம் ஆண்டு முதல் தேவர் ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி […]
ராமநாதபுரத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 -வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.