மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 2-வது அலகில் பராமரிப்பு பணி நடப்பதால் மற்ற அலகுகளின் மூலம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மின்தேவை குறைந்ததால், நேற்று காலை 4-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், தற்போது 1 மற்றும் 3-வது அலகுகளில் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யபடுகிறது. மேட்டூர் அனல்மின் நிலையத்தில் உள்ள 4 அலகுகளில் மூலம் 210 மெகாவாட் வீதம் 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனல் மின் நிலையத்தில் பாய்லர் பழுது காரணமாக 5வது யூனிட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. உடனடியாக இந்த பாய்லர் சரி செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது அனல் மின் நிலைய நிர்வாகமும்,அதன் ஊழியர்களும்,சரி செய்யப்படும் கால அளவு குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.