தேனி மாவட்ட குரங்கணி காட்டுத்தீயில் படுகாயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தஞ்சையை சேர்ந்த சாய் வசுமதி இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்த சென்னையை சேர்ந்த நிவ்ய நிக்ருதி என்பவரும், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இதனால், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி காட்டுத்தீ சம்பவம் குறித்து நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தேனி மாவட்டம் போடியில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து போடி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர், மீட்பு படையினரிடம் அதுல்ய மிஸ்ரா விசாரணை செய்து வருகிறார்.
தேனி மாவட்டம் குரங்கணி மலையில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் உயிரிழந்த, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த சுபாவின் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் சிக்கி, அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் சென்ற கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அதேபோல், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி என்பவரும் சிகிச்சை பலனின்றி மாலை வேளையில் உயிரிழந்தார். இதனால், […]
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி மலை காட்டுத்தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த புனிதா குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை காஞ்சிபுரம் ஆட்சியர் வழங்கினார்.
தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் டிரக்கிங் சென்றபோது குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, திருப்பூரை சேர்ந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதில் நேற்று வரை பலி எண்ணிக்கை 14ஆகவே இருந்தது.இந்நிலையில் சக்திகலாவைத்தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் டிரக்கிங் சென்றபோது குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று வரை தீ விபத்தில் படுகாயம் அடைந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது கணவர் விபின் சம்பவதன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று வரை பலி எண்ணிக்கை 12யாக இருந்தது. மேலும் தற்போது […]
குரங்கணி காட்டுத்தீ விபத்து – அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் மட்டுமே நிகழ்ந்துள்ளது. கடந்த ஓரிருவாரங்களாகவே குரங்கணி பகுதியில் காட்டுத் தீ பரவி வருகிறது என்பதை அரசு அதிகாரிகள் அறியாமலா இருந்தார்கள்? மேலும், இதுகுறித்து நீதி விசாரணைக்கும் ஆணையிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்..
உரிய நுழைவு அனுமதிசீட்டு பெற்றுத்தான் குரங்கணி வனப்பகுதிக்கு ட்ரெக்கிங் சென்றோம். மலைப்பகுதி விவசாயிகள் வேளாண் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை கீழே இறங்கும்போதுதான் புற்களுக்கு தீ வைத்துள்ளனர்.வழக்கத்தை விட காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. குரங்கணி வனப்பகுதிக்கு சென்றபோது அங்கு காட்டுத்தீக்கான அறிகுறி இல்லை.மேலும் அனுபவம் மிக்க வலிக்காட்டிகள், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் உடன் சென்றனர். குரங்கணியில் இருந்து, கொழுக்குமலைக்கு வழக்கமாக செல்லும் பாதையில் தான் ட்ரெக்கிங் சென்றோம்..குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து சென்னை […]
தேனி மாவட்டம் குரங்கணியில் உள்ள மலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்க வேண்டும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 25 லட்சமும், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும். தீக்காயங்களுடன் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு 5 லட்சமும் நிவாரணம் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குரங்கணி காட்டுத்தீயில் காயமடைந்தவர்களை சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி,மாநில செயற்குழு […]
தேனி மாவட்டம் குரங்கணியில் உள்ள மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மாணவ ,மாணவிகளை காப்பாற்றிய குரங்கணியைச் சேர்ந்த மரக்காமலை, காமராஜ், பாக்கியராஜ், சங்கர் ஆகியோருக்கும் அந்த கிராமத்து மக்களுக்கும் வீரச்செயலுக்கான விருதுகளை வழங்க என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) சார்பில் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி,அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) மாநிலச்செயலாளர் P.சண்முகம் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்துகொண்டனர்.