தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.,மேலும், தேனி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து தான் வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தேனி மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதித்தோர் எண்ணிக்கை 1,128 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் […]
கர்ப்பிணி பெண்ணுக்கு 5000ரூ நிதியுதவி செய்த நடிகர் விஜய். தேனியில் காதல் ஜோடி அமீன் மற்றும் கண்சுலாபீவி கடந்த 4 மாதங்களாக வசித்து வருகின்றனர். அமீன் மனைவி கண்சுலாபீவி 5 மாத கர்ப்பிணி பெண் ஆவார். கொரோனா ஊரடங்கில் அமீன் வேலைக்கு செல்ல முடியாததால் மனைவியின் மருத்துவ செலவிற்கு கூட பணமில்லாமல் தவித்து வந்தார். தேனி வந்தடைந்து 4 மாதங்களே ஆன நிலையில் குடும்ப அட்டை இல்லாமல் ரேசன் பொருட்கள் இல்லாமலும் தவித்து வந்தனர். இதை தேனி […]
டிக் டாக்கில் அணைவரும் அவருடைய திறமையை வெளிப்படுத்தி பிரபலமாகி வருகிறார்கள்.அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக டிக் டாக்கில் செம்ம ட்ரெண்டிங்காக வருகிறார் இவர் டிக்டாக் பண்ணும்போது முதல் வார்த்தையாக வணக்கம் டா மாப்பிள தேனீ ல இருந்து இந்த வார்த்தை சொல்லி ஆரமிக்கிறார். இந்த வார்த்தை ரசிகர்கள் மத்தியில் செம்மயாக வலம் வருகிறார்.வணக்கம் டா மாப்பிள தேனீ ல இருந்து என்ற வார்த்தை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஒரு கன்டென்ட் ஆக அமைந்து விட்டது. இத வச்சி […]
இந்தியாவின் முதல் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசின் அணுசக்தித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பொட்டிபுரத்தில் இந்த ஆய்வகம் அமையவுள்ளது. நியூட்ரினோ ஆய்வகத்தில் சுற்றுசூழலுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தேனி மாவட்டத்தில் உள்ள மலைகள் இரண்டு கிலோ மீட்டர் குடைந்து ஆய்வு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2010 ம் ஆண்டு தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரத்தில் […]
தேனி, தர்மபுரி, திருவள்ளூர், கடலூர் போன்ற மக்காவை தொகுதியில் மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் மட்டும் சில தவறுகளின் காரணமாக மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. இதன்படி தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளில் மட்டும் நடைபெறும் மறுவாக்கு பதிவிற்காக 20 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அமமுக கட்சியை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், கூறுகையில் ‘வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க […]
கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி,சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழை, இங்கு அருவியாக பெருக்கெடுக்கிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் தண்ணீர் அளவு கணிசமாக குறைந்து விட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்துள்ளது.
இந்திய அளவில் சிறந்த காவல் நிலையங்களில் தேனி மாவட்டம் பெரிய குளம் காவல் நிலையம் 8 வது இடத்தை பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை அடிப்படையாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு விருதை பெற்றது. […]
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள சண்முகாநதியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையத்தில் பாசனத்திற்காக சண்முகாநதியில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் ஆகியோர், சண்முகாநதியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொருத்து கூடுதல் நீர் திறந்துவிடப்படும் என்று கூறினார்.
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தலைமறைவான இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை பகுதியைச் சேர்ந்த நாகராஜ், அதே பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை காட்டுக்குத் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியை தேடிய பெற்றோர், காட்டுப்பகுதியில் காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நாகராஜை போலீசார் தேடி வந்தனர். இதன் பின்னர் பெரியகுளம் […]
தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள மட்டப்பாறை என்னும் இடத்தில் கடந்த மாதம் 18ம் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் 30 வயதுள்ள வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரு காஞ்சிப்பட்டா, பாலக்கபாடியைச் சேர்ந்த முகமது சமீர் என்பது தெரிய வந்தது. அவர் அரபு நாட்டில் இன்ஜினியர் […]
ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை பல்வேறு தரப்பு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னனியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட்து.அப்போது தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னனியின் ஒன்றிய செயலாளர் தீடீரென தீக்குளிக்க முயற்சி செய்தார்.இதனால் அஙகே பரபரப்பு ஏற்பட்டது. DINASUVADU https://www.facebook.com/amarnath.sug/videos/1418654724903712/
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 56 புள்ளி 5 அடியாக உயர்ந்துள்ளது. நெல்லையில் கனமழை-அணைகளின் நீர்மட்டம் உயர்வு: நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக பாபநாசம், […]
சிறுமி மர்ம சாவில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தேனி அல்லிநகரத்தில் 3-வது நாளாகதொடர்ந்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அல்லிநகரத்தில் சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று 3வது நாளாக தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர். அல்லிநகரத்தை சேர்ந்தவர் டிரைவர் ராஜா.இவரின் மகள் ராகவி 7ஆம் வகுப்பு படித்த்து வந்தார். செப்.25 மாலை இவரின் மகள் ராகவி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக […]
ஆர்.கே.நகர் போல எப்பொழுதும் டி.டி.வி.தினகரன் ஏமாற்ற முடியாது என்று அண்ணா தொழிற்சங்க பேரவை கன்வீனர் ஜக்கையன் கூறினார். தேனி : தேனி மாவட்டதில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 110வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினர்.இக்கூட்டத்திற்கு சின்னமனூர் நகர் கழக செயலாளர் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக அவைத்தலைவர் கண்ணன், இளநீர் ராமர், செல்வம், தீபஜோதி செல்வி மதிவாணன், அகிலன் உள்ளிட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை […]
தேனி மாவட்ட குரங்கணி காட்டுத்தீயில் படுகாயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தஞ்சையை சேர்ந்த சாய் வசுமதி இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், காட்டுத்தீயில் சிக்கி படுகாயமடைந்த சென்னையை சேர்ந்த நிவ்ய நிக்ருதி என்பவரும், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இதனால், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி காட்டுத்தீ சம்பவம் குறித்து நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தேனி மாவட்டம் போடியில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து போடி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர், மீட்பு படையினரிடம் அதுல்ய மிஸ்ரா விசாரணை செய்து வருகிறார்.
தேனி மாவட்டத்தில் உள்ள முத்து தேவன்பட்டியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பறக்கும் படையினரை மாணவர்கள், பெற்றோர் முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பறக்கும் படையினர் இடையூறு ஏற்படுத்தியதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் சிக்கி, அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் சென்ற கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அதேபோல், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி என்பவரும் சிகிச்சை பலனின்றி மாலை வேளையில் உயிரிழந்தார். இதனால், […]
தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் டிரக்கிங் சென்றபோது குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, திருப்பூரை சேர்ந்த சக்திகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதில் நேற்று வரை பலி எண்ணிக்கை 14ஆகவே இருந்தது.இந்நிலையில் சக்திகலாவைத்தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு சென்னை, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் டிரக்கிங் சென்றபோது குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று வரை தீ விபத்தில் படுகாயம் அடைந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது கணவர் விபின் சம்பவதன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று வரை பலி எண்ணிக்கை 12யாக இருந்தது. மேலும் தற்போது […]