தீரன் சின்னமலை ஒரு இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆவார். இவர் 1756-ம் ஆண்டு, ஏப்ரல் 17-ம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றுரில் பிறந்தார். அவரின் தந்தை பெயர் ரத்னசாமி. இவர் தாயார் பெயர் பெரியாத்தா. இவர், மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற பயிற்சிகளை கற்று தேர்ந்துள்ளார். இவர் 1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அறச்சாலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை வெற்றி […]