தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 16ம் தேதி, தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.75 மட்டுமே என அறிவித்துள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கம். வரும் செப்டம்பர் 16ம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சினிமாவுக்கு வாழ்வு தரும் தியேட்டர்களின் கட்டணத்தை குறைக்க திரையரங்கங்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 16ம் தேதி, தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு, அந்த நாளில் நாடு முழுவதும் உள்ள மல்டி பிளக்ஸ்களின், சுமார் 4000 ஸ்க்ரீன்களுக்கு டிக்கெட் […]
திரையரங்குகளில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து 2017-ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்துவதற்கான கட்டணத்தை மறுநிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திரையரங்குகளில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து 2017-ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் குறைவாக உள்ளதாக கூறியுள்ளனர். அரசு உத்தரவை எதிர்த்து திரையரங்குகளின் சார்பில் தாக்கல் செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
மயிலாடுதுறை அருகே உள்ள விளநகர் பகுதியில் துறைகாட்டும் வள்ளலார் கோயில் உள்ளது. 1200ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த கோயில் 1959ம் ஆண்டு 25வது தருமை ஆதீனத்தால் குடமுழுக்கு செய்யப்பட்ட பின்னர் தற்போது தான் மாசிலாமணி சுவாமிகள் தலைமையில் அடுத்த மாதம் 4ம்தேதி 27வது சந்நிதானம் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கோயிலின் வடபகுதியில் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டுவதற்காக 10அடி குழி தோண்டிய போது மிகவும் பழமையான மெல்லிய […]
திரையரங்கு திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அமச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் திரையரங்குகள் எப்பொழுது திறக்கப்படும் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது, அப்போது அவர் கூறுகையில், முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனைகூட்டத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து விவாதித்தோம். இந்நிலையில், விரைவில் திரையரங்கு திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
திரையரங்குகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. அந்த வகையில் ,அக்டோபர் 15-ஆம் தேதி […]
டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரசால் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸால் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் […]