பதவியை ராஜினாமா செய்தார் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்!

Tirupursubramaniam

தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பதவியை திருப்பூர் சுப்ரமணியம் ராஜினாமா செய்துள்ளார். திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் திடீரென ராஜினாமா செய்தது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது தனிப்பட்ட காரணங்களால் ராஜினாமா செய்வதாக சுப்ரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கிறார். இது குறித்த தனது அறிக்கையில், எனது சொந்த வேலை காரணமாக நமது சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜீனுமா செய்கிறேன். இது நாள் வரை ஒத்துழைப்பு கொழுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த … Read more

OTT-யில் வெளியான படங்கள் திரையிடப்படாது – திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு

ஓடிடி-யில் வெளியான திரைப்படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு.  கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு சில பல படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால்  திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சில தயாரிப்பாளர்கள் ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்குகளில் வெளியீட ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில்,  ஓடிடியில் வெளியான படங்களை திரையிடுவதில்லை என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஓடிடி விற்பனைக்கான முன்னோட்ட … Read more

இன்று முதல் அனைத்து திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி…!

இன்று முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. எனவே, இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்-6-ம் தேதி வரை அதாவது மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் இன்று முதல் திரையரங்குகள் இயங்க … Read more

தியேட்டர் உரிமையாளர்கள் இன்று மாலை ஆலோசனை..!

தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் இன்று மாலை காணொளியில் ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவியதையடுத்து கடந்த ஏப்ரல்  மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக தியேட்டர் , வணிக நிறுவனங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. பின்னர், கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அறிவிக்கும் ஊரடங்கு தளர்வில் தியேட்டர் திறப்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டில் 100 நாட்களுக்கு மேலாக தியேட்டர்கள் … Read more

3 மாதங்களுக்கு பிறகு ஆந்திராவில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு…!

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த ஆந்திர திரையரங்குகள் 3 மாதங்களுக்கு பின் நாளை திறக்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டது. இந்நிலையில் பல மாநிலங்களில் வழிபட்டு தலங்கள், தியேட்டர்கள், மால்கள், கடைகள் அனைத்தும் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல ஆந்திர மாநிலத்திலும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையிலேயே … Read more

#Breaking: புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு படங்களை திரையிட முடிவு- திரையரங்க உரிமையாளர் சங்கம்!

புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, திரையரங்குகளில் படத்தை தொடர்ந்து திரையிட முடிவு செய்துள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள், இரவு 8 மணிக்குள் சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள், ஏப்ரல் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் … Read more

மாஸ்டர் படத்துக்கே முன்னுரிமை – தியேட்டர் உரிமையாளர்கள்

அனைத்து திரையரங்குகளிலும் திரையிடுவோம் என திருப்பூர் சுப்ரமணியம் தனியார் தொலைக்காட்சியுடம் தகவல் தெரிவித்துள்ளார். மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13-ம் தேதி வெளியாகும் என மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த அறிவிப்பிற்கு மத்திய அரசு 100% பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என கடிதம் வெளியிட்டதையடுத்து தளபதி ரசிகர்கள் தற்போது குழப்பத்தில் உள்ளனர். 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி திரும்பப் பெறப்பட்டால் மாஸ்டர் … Read more

தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மேலும் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தபடி திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக … Read more

10ம் தேதி புதிய படங்கள் வெளியாகும்போது கட்டுப்பாடுகள் வேண்டாம் – கடம்பூர் ராஜூ

வருகின்ற, 10ம் தேதி புதிய படங்கள் வெளியாகும்போது கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி,  திரையரங்குகளில் 50 சதவிதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி வரும் நவம்பர் 10ம் தேதி முதல்செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், வரும் 10ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட வேண்டும் என்றும் தியேட்டர்களுக்கு பட தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார். திரையரங்குகளை … Read more

இன்று முதல் திரையரங்குகளை  திறக்க மத்திய அரசு அனுமதி

இன்று முதல் திரையரங்குகளை  திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்,  மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.இதில் இன்று … Read more