திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே இருக்கும் ரயில் நகர் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1970 ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட அந்த வீடு நேற்று இரவு மேற்கூரை இடிந்து விழுந்து துயரசம்பவம் ஏற்பட்டது. இந்த வீட்டின் உரிமையாளர் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து என்பவர். இவர் தன்னுடைய தயார், மனைவி, குழந்தைகள் ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். […]