வற்றாத ஜீவநதியான கங்கையும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக காய்ந்து போகிறது. வாரணாசியில் கங்கை நதி வறண்டு கிடப்பதால் குவியல் குவிலாக மணல் திட்டுகள் காட்சியளிக்கின்றன. கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாததால், நிலத்தடி நீருக்கும் ஆபத்து நேரிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கங்கையில் கலக்கப்படும் கழிவுகள் காரணமாக தூர் வாரப்படாமல் கங்கை நதி இந்த நிலைக்கு ஆளாகியுள்ளது. வடமாநிலங்களில் 45 கோடி மக்களின் நீராதாரமாக கங்கை விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.