ஆளில்லா டாங்குகள், கப்பல்கள், எந்திர மனிதன் ஆகியவற்றை எதிர்காலத்தில் போர்களில் பயன்படுத்துவது குறித்த செயல் திட்டத்தில் அரசு இறங்கியுள்ளது. சீனா தனது முப்படைகளிலும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஆயுதங்களையும் கருவிகளையும் பெருக்கிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பும் ஆளில்லா டாங்குகள், கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கவும், கணினிக் கட்டுப்பாட்டில் இயங்கும் எந்திர மனிதர்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. டாட்டா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் இதற்கான செயல் திட்டத்தை உருவாக்கி வருகின்றனர். […]