சீவலப்பேரியில் உள்ள சுடலைமாட சாமி கோவில் கொடை விழா இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதை முன்னிட்டு யானை ஒன்று கோவிலுக்கு வரவழைக்கப்பட்டு இருந்தது. இதே கோவிலில் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் பத்ரகாளி ஆகியோர் தங்கி இருந்து பூ வியாபாரம் செய்து வந்தனர். தொட்டு வணங்குவதற்காக சென்ற பத்ரகாளியை அந்த யானை தூக்கி எறிந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். யானைக்கு […]