மேற்கு வங்கம் மாநிலத்தில் நடந்த துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது பூஜைக்கு வைக்கப்பட்ட துர்கா சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.அப்போது எதிர்பாரதவிதமாக படகு கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட பெல்டங்காவில் துர்கா சிலை ஒன்றை ஆற்றில் கரைப்பதற்காக படகில் கொண்டு சென்றனர். அங்கு 2 படகுகளில் அந்த சிலையை வைத்து ஆற்றின் நடுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அப்போது திடீரென அந்த படகுகள் கவிழ்ந்தன. இதில் படகில் இருந்த 6 பேரும் நீருக்குள் சிலைக்கு அடியிலும் சிக்கிக்கொண்டனர். […]