ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிங்களில் விவசாயிகள் விளைபொருட்களைச் சந்தைக்கு அனுப்பாமல் இருக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகும் விலை, வேளாண் கடன் தள்ளுபடி ஆகிய கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் பேசியபோது, ஐந்நூறுபேர், ஆயிரம்பேர் சேர்ந்து ஒரு சங்கம் […]