விளை நிலத்தில் பள்ளி மாணவன் மலம் கழித்ததை கண்ட உரிமையாளர், சிறுவனிடம் மலத்தை அள்ள கூறி துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூட்டாரம்பள்ளியில் கடந்த ஜூலை 15-ம் தேதி மாலை 5-மணியளவில் 10-ம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுவன் ஒருவன் மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் அருகிலுள்ள புழுதி நிலம் ஒன்றில் மலம் கழிக்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் நில உரிமையாளரான ராஜசேகர் சிறுவன் மலம் கழிப்பதை கண்டு கோவமடைந்து கடுமையாக […]
5-8 வகுப்புகளுக்கு நடைபெற இருக்கும் பொதுத்தேர்விற்கு எதிர்ப்பு தலைமை ஆசிரியர் ஒருவர் தன் பெற்ற நல்லாசிரியர் விருதை திருப்பி ஒப்படைக்க முடிவு 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2019-2020 கல்வியாண்டு முதல் தமிழக அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.இதற்கு பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் கிராமபுற மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் மேலும் அவர்கள் தங்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தும் நிலையை இந்த பொதுத்தேர்வு உருவாக்கும் என்று கூறப்படுகிறது. […]
சிபிஎம் கட்சியின் மாநில மாநாடானது தூத்துக்குடியில் பிப்ரவரி 17 முதல் 20வரை நடைபெற்றது. இந்நிலையில் மாநாட்டின் இறுதி நாளான 20 ஆம் தேதியன்று முறையான அனுமதி பெற்று செந்தொண்டர் அணிவகுப்பு,பேரணி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பேரணியின் போது தூத்துகுடி காவல்துறையின் தாக்குதலை கண்டித்தும், அந்த தாக்குதலுக்கு காரணமான தூத்துக்குடி மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் செல்வன் நாகரத்தினம் பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி தர்மபுரி சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் டில்லிபாபு […]
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.இதனால் அங்கு அண்மையில் பெய்த மழை காரணாமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் புத்தாண்டு தினமான இன்று தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்தும் எண்ணெய் மசாஜ் செய்து அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர். அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். source: dinasuvadu.com