திருவையாற்றில் அரசு மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பேருந்து விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை வைத்து தற்போது சில அமைப்புகள் அரசியல் செய்து வருகின்றன. ஒரு சில விஷமிகள் தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தினர். பின்னர் அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று போலீசார் பந்தோபஸ்து அளித்து வந்தனர். அதன் பிறகு இந்து கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் பிள்ளையார்பட்டியில் உள்ள சிலைக்கு ருத்ராட்ச மலை அணிவித்து பாலபிஷேகம் செய்து பூஜைகள் செய்தார். இது மிகவும் சர்ச்சையானது. பின்னர் அங்கு மீண்டும் போலீசார் […]
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலில் 300ஆவது ஆண்டு பிரம்மோற்சவ கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.கல்யாணபுரம் சீனிவாச பெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சி, கடந்த மாதம் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று மாலை நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையேற்றுத் துவக்கிவைத்த நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த […]