பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர்.. ‘நொண்டி சாக்கு’ அதிமுக.! அமைச்சர் கடும் விமர்சனம்.!

ADMK Chief Secretary Edappadi Palaniswamy - Minister Thangam Thennarsu

தமிழக சட்டப்பேரவையில் முன்னதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி , கடந்த நவம்பர் 13ஆம் தேதி விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுபினார். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை இன்று மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் 10 சட்டமசோதாக்கள் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அனல் பரந்த விவாதம்… வெளிநடப்பு.! சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேறிய முக்கிய தீர்மானங்கள்.! பாஜக – அதிமுக வெளிநடப்பு … Read more

TNPSC குரூப் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 80%-க்கு மேல் நிறைவு..! அமைச்சர் தகவல்.!

ThangamThennarasu

பிப்ரவரி 25ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 80% க்கு மேல் நிறைவடைந்துள்ளது என்றும், டிசம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சுமார் 6,000 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 2 மற்றும் 2அ பணிகளுக்கான … Read more

கூரையின் மீதேறி சேவல் கூவுவதால் சூரியன் உதிப்பதில்லை…! – அண்ணாமலை

BJP State Leader Annamalai

அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சட்டப்பேரவையில், ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும், நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது. 2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ5.16 லட்சம் கோடி. ஆனால், வரிப்பகிர்வாக நமக்கு கிடைத்தது ரூ2.08 லட்சம் கோடி மட்டுமே. உ.பி.,யின் பங்களிப்பு ரூ2.24 லட்சம் கோடி. ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டது ரூ9.04 லட்சம் கோடி. இப்படித்தான் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு … Read more

பரந்தூர் விமான நிலைய திட்டம் – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

புதிய விமான நிலைய திட்டத்துக்காக மொத்தம் 11 இடங்களை ஆய்வு செய்தோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,750 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான பணிகளும் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. மறுபக்கம் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் … Read more

#Justnow:தொழில்துறையை தங்கமாக மாற்றிய ‘தங்கம் தென்னரசு’ – முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

சென்னை,நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும்,முதல்வர் மு.க.ஸ்டாலின் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.ரூ.22,252 கோடி மதிப்பில் 21 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.இதன் மூலம் 17,654 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில்,தொழில்துறையை தங்கமாக மாற்றிய அமைச்சர் ‘தங்கம் தென்னரசு’ என முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார்.இது … Read more

தொழில் துறை பெயர் மாற்றம் – அமைச்சர் தங்கம் தென்னரசு

தொழில் துறையை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு. தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் பேசுகையில், தொழில் துறையை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும். மாநில அளவில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையகரகம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் புதிய சிப்காட் தொழில்நுட்ப பூங்கா … Read more

ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட வேண்டும் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு செய்துள்ளார். விரைவில் ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். கீழடி அருங்காட்சியகம் அமைக்கும் பணி குறித்தும், அகழாய்வு பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்ட  அமைச்சர் தங்கம் தென்னரசு, பழங்கால மக்கள் பயன்படுத்திய … Read more

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி.., ஒரு வாரத்தில் முடிவு..!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை தமிழக அரசு எடுத்து நடத்துவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் (HLL Biotech) கடந்த 2012-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால், தற்போது வரையில் ஒரு டோஸ் மருந்துகூட தயாரிக்காமல் தொடர்ந்து கிடப்பிலேயே உள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை தமிழகத்திற்கு ஒதுக்க வலியுறுத்துவதற்காக இன்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டி.ஆர்.பாலு உள்ளிட்டோர்  டெல்லியில் … Read more

மே 11 முதல் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் கிடைக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

ஸ்டெர்லைட் மூலம் தமிழகத்திற்கு 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் என்று தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வரவுள்ளதால் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேகொண்டார். தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, தேவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் 24ம் தேதிக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது என்றும் மீண்டும் முழு ஊரடங்கு நிலை … Read more

மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள்! தங்கம் தென்னரசு எழுப்பும் 12 கேள்விகள்!

 ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக தங்கம் தென்னரசு எழுப்பிய 12 கேள்விகளை எழுப்பியுள்ளார். கொரோனா ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முடிவுகளும், முயற்சிகளும் மாணவர்களின் எதிர்கால நலனுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அமைய வேண்டும் என வலியுறுத்தியுள்ள … Read more