சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனத்தையும், விக்ரம் நடிப்பு மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் ஆக 15-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் கால்டாகிரோன், பசுபதி மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். […]