மக்களவை தேர்தல் : தேனி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளரான டிடிவி தினகரனை தோற்கடித்து, திமுகவின் தங்கத் தமிழ்செல்வன் அபார வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 17-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் 4,99,188 வாக்குகள் பெற்று, அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை விட 2,49,624 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். 2ஆவது இடத்தில் இருக்கும் டிடிவி தினகரன் 2,49,564 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி மொத்தத்தில் 1,33,458 […]
மக்களவை தேர்தல் : தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் 74610 வாக்குகள் பெற்று 35584 வாக்கு வித்தியாசத்தில் தொடர் முன்னிலை வகுத்து வருகிறார். அதற்கு அடுத்தபடியாக டிடிவி தினகரன் (அமமுக) 39026 வாக்குகளுடன் பின்னடைவு சந்தித்துள்ளார். மேலும், நாராயணசாமி (அதிமுக) – 20426 வாக்குகளும், மதன் ஜெயபால் (நாதக) – 9793 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Thanga TamilSelvan: வேட்புமனு படிவத்தை மறந்து வைத்துவிட்டு ஆட்சியாளர் அலுவலகம் வந்த திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த சூழலில், வேட்புமனு தாக்கல் கடைசி நாளான இன்று தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, கம்பம் […]
அமமுகவில் இருந்து திமுக சென்றவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்து கொண்டார். இதேபோல் செந்தில் பாலாஜியும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தினகரனுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தனது தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தார் தங்கத்தமிழ்செல்வன். ’தலைமைக் கழக அறிவிப்பு’ கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் […]
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்கதமிழ்ச்செல்வனுக்கு கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளது திமுக. சமீப காலமாக தினகரன் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிக்கு சென்று வருகின்றனர்.அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இதன் பின்னர் தங்க தமிழ்ச்செல்வன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.இந்த நிலையில் […]
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.இதனால் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்செல்வன். இதனிடையே இன்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை . அடுத்த தேர்தலுக்குள் பலன்களை அனுபவிப்பதற்காகவே வெளியேறி சென்றுள்ளனர்.புதிய மாவட்ட செயலாளரை தேர்வு செய்வதற்காக கட்சியினருடன் ஆலோசனை நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.
செந்தில்பாலாஜியை தொடர்ந்து தங்கதமிழ்ச்செல்வனும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது . குறிப்பாக திமுகவின் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் அண்ணா அறிவாலயம் வந்துள்ளனர். தங்கதமிழ்செல்வன் திமுகவில் இன்று இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் திமுகவின் தேனி மாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் முகாமிட்டுள்ளனர். அமமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த தங்க தமிழ்செல்வன், தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியில் […]