வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 2 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி, […]
தென்மாவட்டத்தில் பெய்த் அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி , திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதன் வழித்தடத்தில் இருந்த பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி, பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது ஒருசில முக்கிய பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ஓரளவுக்கு இயல்புநிலை திரும்பினாலும், இன்னும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் […]
தென் தமிழகத்தில் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் அதி கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத கனமழை காரணமாக அப்பகுதிகளில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்து வரும் 24 மணிநேரத்தில் இந்த […]
தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார். குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டிற்காக ஆகஸ்ட் 18 முதல் 31 வரை 1,693.44 மி.கன அடி நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று, மேட்டூர் அணையிலிருந்து வரும் 18 ஆம் தேதி முதல் புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வரும் […]