மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியை மாநில தலைவராக நியமனம் செய்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு முடிவுகளை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிமுன் அன்சாரி மாநில தலைவராக தனது பணிகளை தொடருவார் என தலைமை நிர்வாக குழு தெரிவித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டு வந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற […]
“நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது” என்ற பதாகையுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்கு வந்தார். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடைபெற்றது. நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யவேண்டுமென மத்திய அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், […]
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் முயற்சி செய்ய வேண்டும் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், தமிழக சிறைகளில் 10 ஆண்டுக்கு மேல் உள்ள கைதிகளை மனிதாபமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் .பேரறிவாளன் […]
தமிழக சட்டப்பேரவையில் இருந்து அபூபக்கர், தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். ஹிந்து மத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிசத்தின் ரத யாத்திரையை, தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி, அபூபக்கர், தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர்.