சென்னையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் அனுமதியின்றி யானையைப் பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்க படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு குஷ்பூ, ஷாம், உள்ளிட்ட பல […]