கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகைசால் தமிழர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் விரைவில் முழுநலம் பெற்றுத் திரும்பிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு இரண்டு தினங்களாக லேசான காய்ச்சல் இருந்த காரணத்தினால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதனையடுத்து,அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.இதனைத் தொடர்ந்து,சிகிச்சைக்காக […]