உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா.. என்ற திருமந்திரம் சகல வினைகளையும் போக்கும்.. ஈசனின் ஞானக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட சுடற்பொறியில் இருந்து தோன்றியவர்தான் முருகப்பெருமான். முருகன் தோன்றிய நாள் வைகாசி விசாகம் என்றாலும் அன்னையிடம் வேல் வாங்கிய நாள் தைப்பூசம் ஆகும். இது மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக உள்ளது .தைப்பூசத்தன்று செய்யப்படும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையும் எனவும் நம்பப்படுகிறது. தைப்பூச திருவிழா […]
ஈரோடு மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை ஒட்டி நடந்த திருவிழாவில் தேர் சரிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ் மாதங்களில் தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூசம் நட்சத்திரம் சேரும் நாளை தைப்பூசத் திருவிழாவாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகில் முதலில் உயிர்கள் தோன்றிய நாளாக தைப்பூச நாள் கொண்டாடப்பட்டு வருகின்றன. தைப்பூசத்தன்றுதான் வள்ளியை பகவான் முருகன் மணம் புரிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் தைப்பூசம் நாளன்று முருகன் கோயில்கள் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. இன்றைய […]
பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி. தைப்பூச திருவிழாவை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 14 முதல் 31-ம் தேதி வரை ஒரு நாளைக்கு 25,000 பக்தர்கள் மட்டுமே பழனி கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார். மேலும், பழனி கோவிலுக்கு பக்தர்கள் தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டுவரக்கூடாது என்றும் அங்கபிரதட்சணம் போன்ற நேர்த்திக்கடன்கள் செய்யக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். […]
முருகப்பெருமானின் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான தைப்பூச திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் பெற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை […]