மியான்மரில் சிக்கிய 13 தமிழர்கள் முதலமைச்சர் கோரிக்கையினால் மீட்பு. தாய்லாந்துக்கு வேலைக்காக சென்று மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்களில் 13 பேர் மீட்டு தமிழகம் அழைத்துவரப்படுகிறார்கள். தமிழகள் 13 பேர் விமானம் மூலம் தமிழகம் வரவுள்ளனர். தாய்லாந்துக்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்ட தமிழகர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டனர். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட தமிழர்கள் இன்றிரவு 8 மணிக்கு […]
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடினர். அரசு மாளிகைகள், முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. மேலும், சிலவை ஏற்றிக்கப்பட்டது. அந்த சமயம், இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி, மாலத்தீவில் தஞ்சமடைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். அவர் விரைவில் நாடு திரும்புவார் என இலங்கை அரசியல் […]
தாய்லாந்தைச் சேர்ந்த ஓங் டாங் சோரூட் என்பவர் 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார். தாய்லாந்தின் இளம் டாட்டூ ஆர்ட்டிஸ்ட் ஓங் டாங் சோரூட் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் பேசப்படும் நபராக உள்ளார். காரணம் அவரது டாட்டூ கலை அல்ல.., சோரூட்டிற்கு 8 மனைவிகள் உள்ளனர். அந்த மனைவிகளுடன் சோரூட் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கடந்த வாரம் அவர் தாய்லாந்தில் ஒரு நகைச்சுவை தொலைக்காட்சி சேனலுக்கு சோரூட் தனது எட்டு மனைவிகளுடன் […]
தாய்லாந்தில் நடைபெற்ற குரங்கு திருவிழாவில் பல்வேறு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். தாய்லாந்து நாட்டில் உள்ள லோப்புரிக்கு சுற்றுலா பயணிகளின் அதிகமான வருகைக்கு காரணமாக இருப்பது அங்கிருக்கும் குரங்குகள். இதனால் இந்த குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் குரங்கு திருவிழா என்பது நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த திருவிழா நடைபெறவில்லை. தற்போது இந்த குரங்கு திருவிழா லோப்புரியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான குரங்குகள் […]
காதல் பிரிவு காரணமாக தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் விலை மதிப்புள்ள பைக்கை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவர் உயிருக்கு உயிராக ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென காதலன் காதலை பிரேக் அப் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த காதலி தான் பரிசாக அளித்த பைக்கை கொளுத்தியுள்ளார். இந்த பைக்கின் விலை ரூ.28 லட்சம். விலையுயர்ந்த பைக்கை எரித்த சம்பவம் பார்க்கிங் பகுதியில் இருக்க கூடிய […]
தாய்லாந்தில் பசியின் கொடுமையால் ஒரு வீட்டின் சுவரை உடைத்து கொண்டு யானை ஒன்று உணவை எடுத்துக்கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தில் ஹுவாஹின் பகுதியை சேர்ந்த ஒரு யானை சுவர் உடைத்து வந்து உணவை உண்டுள்ளது. இந்த பகுதியில் இருந்த வீட்டின் பின் பக்க சுவர் ஒன்றை யானை உடைத்துள்ளது. இந்த சம்பவம் அதிகாலையில் 2 மணிக்கு நடந்துள்ளது. வீட்டின் சுவர் உடைந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த தம்பதியினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது யானை […]
தாய்லாந்தில் உள்ள ஒரு மாகாணத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒவ்வொரு வாரமும் மாடு பரிசு. வடக்கு தாய்லாந்தின் ஒரு மாவட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு ஒரு புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அதில் ரேஃபிள் கேம்பைன் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலும் நேரடியாக மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் இதன் மூலம் அந்த மாவட்டத்தின் குடியிருக்கும் நபர்களில் ஒருவருக்கு ஒவ்வொரு வாரமும் 319 டாலர் மதிப்புள்ள மாடுகளை வெல்ல முடியும் என்ற பிரச்சாரத்தை […]
தாய்லாந்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று. கடந்த 7 மாதங்களில், இது அதிகப்படியான தொற்று எண்ணிக்கை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், தாய்லாந்தில் தற்போது புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களில், இது அதிகப்படியான தொற்று எண்ணிக்கை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொற்றானது இறால் சந்தையிலிருந்து பரவியுள்ளது. சந்தையில் இறால் விற்கும் 67 வயதான […]
தாய்லாந்தில் 3,000 முதல் 5,000 ஆண்டுகள் பழமையான 39 அடி திமிங்கலத்தின் எலும்புக்கூடை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கண்டுபிடித்த இந்த திமிங்கலம் பிரைடின் வகையை சேர்ந்தவை என்றும் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் நகரின் மேற்கே உள்ள சாமுத் சாகோனில் கடற்கரையிலிருந்து 7.5 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 13-28 டன் எடை வரை வளரக்கூடிய பிரைடின் திமிங்கலங்கள் உலகளவில் வெப்பமண்டல மற்றும் வெப்பமான மிதமான கடல்களில் வாழ்கின்றன, அவை இன்றும் தாய்லாந்தைச் சுற்றியுள்ள நீரில் காணப்படுகின்றது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் […]
கரும்பை தின்று விட்டு மின்கம்பத்தின் பின்னால் ஒளிந்த குட்டி யானையின் கியூட்டான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. குழந்தைகளை போன்று விலங்குகளின் குட்டிகளும் பல சேட்டைகளை செய்வது உண்டு .அந்த வகையில் ஒரு யானையின் கள்ளம் கபடமில்லாத செயல் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது . சுமார் 2000-க்கும் மேற்பட்ட யானைகளை உடைய தாய்லாந்து நாட்டில் உள்ள விவசாயிகள் தூங்காமல் தங்கள் வயல்களை காவல் காப்பார்கள் . ஏனெனில் அங்குள்ள யானைகள் ஊர்களில் உள்ள […]
இரவில் தன் வீட்டு தோட்டத்தில் புகுந்த யானையை தைரியமாக விரட்டிய குட்டி பூனையின் செயல் பலரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தாய் நாட்டில் உள்ள உள்ளூர் பூங்கா யானை ஒன்று அடிக்கடி தொந்தரவு செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது பூங்காவில் இருந்தாலும் உணவைத் தடி இரவு நேரங்களில் மக்களின் தோட்டங்களில் சென்று அங்கு உள்ள செடிகளை எல்லாம் மிதித்து விடுவதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள நக்கோன் நயோக்கில் எனுமிடத்தில் செல்லப்பிராணியாக பூனை ஒன்று […]
அழகான பெண்ணை பார்த்தால் அடுத்த நிமிஷமே திருமணம் செய்துகொள்ளும் தாய்லாந்து மன்னருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையிலும் மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய நபர் தான் பிரதமராக அல்லது முதல்வராக நாட்டை ஆளுகை செய்கின்றனர். இது மக்களாட்சி ஆனால் மக்களாட்சிக்கும் மன்னர் ஆட்சிக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. ஓமன், தாய்லாந்து, சவுதி அரேபியா, சூடான் ஆகிய பல்வேறு நாடுகளில் முடியாட்சி என அழைக்கப்படக்கூடிய மன்னர் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. தாய்லாந்து நாட்டில் தற்போது […]
தாய்லாந்து நாட்டில் குரங்குகள் தேங்காய்க்களை பறிக்கும் இயந்திரமாக பார்க்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டில் மக்கள் அனைவரும் சுற்றுலா சென்று பார்க்க விரும்புவது அங்குள்ள குரங்குகள் என்று கூறலாம், தாய்லாந்து நாட்டில் குரங்குகள் தோட்டங்களில் வேலை செய்யும் அழகை பார்ப்பதற்கு அதிக மக்கள் ஆண்டு தோறும் சென்று வருகின்றனர் இந்த நிலையில் குரங்குகள் பயன்படுத்துவதற்கு பீட்டா அமைப்பு நீண்ட காலமாகவே எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் காடுகளில் மிகவும் சந்தோசமாக சுற்றித் திரியும் குரங்குகளை கட்டாயப்படுத்தி பிடித்து […]
கொரோனா வைரசுக்கு விரைவான மற்றும் மலிவான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, […]
தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே டெர்மினல் 21 வணிக வளாகத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 35-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே கோரத் என்ற பகுதியில் சார்ஜெண்ட் மேஜர் ஜக்கரபந்த் தொம்மா என்ற ராணுவ அதிகாரி நேற்று( சனிக்கிழமை) அங்கிருந்த ராணுவக் கவச வாகனத்தைக் கடத்த முயன்றுள்ளர். அப்போது அவரைத் தடுக்க முயன்ற ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார். […]
தாய்லாந்தில் ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ள நாய்க்குட்டி சுற்றுவட்டார மக்களின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ளது. அந்த நாய்க்குட்டிக்கு சைக்ளோப்ஸ் என்று பெயரிட்டு மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார் உரிமையாளர். தாய்லாந்தில் ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ள நாய்க்குட்டி சுற்றுவட்டார மக்களின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ளது. அந்நாட்டின் சச்சோயெங்சாவோ மாகாணத்தில் சோம்ஜாய் பும்மான் என்ற அரசு ஊழியர் வளக்கும் நாய், கடந்த ஞாயிற்றுகிழமை 2 குட்டிகளை ஈன்றது. அதில் ஒன்று நெற்றியில் ஒரே ஒரு கண்ணுடனும் அதன் மேல் சிறிய வால் […]
சீனாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து நாட்டில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பால் 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்த அரசு அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சீனாவில் உள்ள பல நகரங்களில் பரவியுள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த […]
சட்டவிரோதமாக தாய்லாந்திற்கெதிராக கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 4000 கோழிகள். நோய் காரணமாக கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக தகவல். தாய்லாந்திருந்து மலேசியாவுக்கு 4000 கோழிகளை அதிகாரிகள் கடத்தி கழுத்தை நெரித்து கொன்றதாக நீதிமன்றத்தில் மலேசிய மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த கோழிகளை சேற்றில் வீசி இரக்கமில்லாமல் கொலை செய்ததாக அந்த ஊர் மக்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அறிந்து அங்கு வந்த கால்நடை மேம்பாட்டு துறையினர் கண்டறிந்து விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது […]
தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபோல் அதுல்யதேஜ் மறைவிற்கு பிறகு அவரது மகன் மகா வஜ்ராலங்கோன் தாய்லாந்து நாட்டின் மன்னராக பதிவி ஏற்றுகொண்டார். இந்த பதவியேற்பு விழா மே மாதம் நடைபெற்றது. பதவியேற்புக்கு முன்னர் சுதீடா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் மகா வஜ்ராலங்கோனின் பாதுகாவலராக இருந்து வந்தார். இவர் செவிலியராக பணியாற்றியுள்ளார். ராணுவ தளபதியாகவும் இருந்துள்ளார். இவர் மன்னர் மகா வஜ்ராலங்கோனின் 4வது மனைவியாவார். இவர் அரசி மரியாதைகளை தவறாக பயன்படுத்தியதாகவும், அரசருக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி […]
தாய்லாந்தில் ஒரு நீர்வீழ்ச்சியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்துவிட்டது. அதனை காப்பாற்ற போராடிய 5 யானைகளும் நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிரிழந்துவிட்டன. மேலும் இரு யானைகள் மீட்கப்பட்டுள்ளன. தாய்லாந்தில் உள்ள கா யே பகுதில் உள்ளது அந்த உயிரியல் பூங்கா. அந்த பூங்காவில் நரக வீழ்ச்சி என கூறப்படும் ஹா நரேக் எனும் பிரமாண்ட நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. அதில் ஒரு குட்டியானை ஒன்று தவறி விழுந்துவிட்டது. இதனை பார்த்த மற்ற யானைகள் அந்த யானையை […]