5 இடங்களில் கொரோனா சோதனை ஆய்வகங்கள் – உத்தரப்பிரதேச முதல்வர்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என கண்டறிய 5 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார். வாரணாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லக்னோவில் 2 ஆய்வகங்களும், அலிகார், வாரணாசி மற்றும் கோரக்பூரில் தலா ஒரு ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் தொடங்கிய கொரோனா தற்போது இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. இந்தியாவில் இதுவரை […]