சென்னையில், கலப்பட பெட்ரோல் வினியோகம் செய்வதாக எழுந்த புகாரில், எச்.பி பெட்ரோல் பங்கில் பெட்ரோல் மாதிரிகள் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் முருகன் ஏஜென்சி நடத்தும், எச்.பி. பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்பிச் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலர், மீண்டும் பங்கிற்கு வந்து முற்றுகையிட்டனர். வாகனங்கள் திடிரென பழுதாகி நின்றதாகவும், இதற்கு கலப்பட பெட்ரோல் தான் காரணம் என ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மற்றும் எச்.பி பெட்ரோலியம் மாவட்ட துணை மேலாளர் […]
சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல உணவு விடுதிகளான சரவண பவன், அஞ்சப்பர், ஹாட் பிரட்ஸ், கிராண்ட் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அதனடிப்படையில், இன்று காலை 8 மணி முதல் அந்த உணவு விடுதிகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சோதனையில் […]
பிப்ரவரி 25, 1988 வரலாற்றில் இன்று – இந்தியாவின் தரை – குறு இலக்குகளை இலக்குகளைத் தாக்கக்கூடிய, ஆணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் படைத்த (SRBM ) பிருத்வி -1 ஏவுகணை ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் அஞ்சின.மேலும் அமெரிக்கா இந்நிகழ்வுகளுக்கு ஆட்சேபித்தது.