அமெரிக்கா: மனிதனைப் போலவே செயல்படும் ஒரு ரோபோவை உருவாக்குவதற்கு மிக அருகில் வந்துவிட்டான் மனிதன். ஆம், அமெரிக்க தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலோன் மஸ்க் மனிதர்களைப் போலவே நடக்கவும் பேசவும் கூடிய ரோபோவை உருவாக்கியுள்ளார். கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ‘We, Robot’ நிகழ்ச்சியில் டெஸ்லாவின் மனித உருவ ‘ஆப்டிமஸ்’ ரோபோக்களை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க். இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்த ரோபோ உங்கள் குழந்தைகளைப் பராமரிப்பது, புல்வெளி வெட்டுவது, பானங்கள் வழங்குவது என நீங்கள் எதைச் செய்ய […]
அமெரிக்கா: இந்த வருட இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலில் ஜோ பைடன் – டொனால்ட் டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இருவரும் நேரடியாக கலந்து கொண்ட விவாத நிகழ்வில் டிரம்பிற்கு தான் ஆதரவு கிடைத்தது. அடுத்தடுத்த மேடைகளில் ஜோ பைடன் பேச்சில் தடுமாறுவது அவருக்கு பின்னடைவாக […]
எலான் மஸ்க்: உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஆப்பிள் – ஓபன் ஏஐ விவகாரத்தில் தப்பாட்டம் படத்தின் போஸ்டரை பகிர்ந்து விமர்சித்துள்ளார். உலகின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் தனது ஆர்வத்தை காட்டி கொண்டிருக்கிறார். அதில் இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது எப்படி? என்றும் ஒரு ராக்கெட்டை எப்படி மீண்டும் பயன்படுத்துவது என அவர் ஆராய்ச்சியில் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி கொண்டு வருகிறார். மேலும், டெஸ்லா நிறுவனத்தின் […]
Elon Musk: இந்தியாவில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்தியாவை மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் இடமாக மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.4,150 கோடி முதலீடு செய்தால் இறக்குமதி வரியை குறைக்கும் புதிய EV கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதாவது, இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட […]
Bezos vs Musk: உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையை எலான் மஸ்க் இழந்துள்ளார். இதனையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார். Bloomberg Billionaires Index-ன் குறியீட்டில் ஜெஃப் பெசோஸிடம் எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கள்கிழமை) டெஸ்லா பங்குகள் 7.2% அளவில் சரிந்ததையடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே சமயம் பெசோஸ் தனது செல்வத்தின் பெரும்பகுதியை (சுமார் 9 சதவீதம்) […]
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், பல துறையில் தொடர்ந்து பல்வேறு புதுமைகளை படைத்து வருகிறார். அதன்படி, டெஸ்லா எலக்ட்ரிக் கார், விண்வெளி பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அசத்தி வரும் எலான் மஸ்க், சமீபத்தில் நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எலான் மஸ்க், மனித உருவ ரோபோக்களை தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். […]
டெஸ்லா பங்குகள் ஆகஸ்ட் 2020க்கு பிறகு முதன்முறையாக தனது மிகக் குறைந்த நிலைக்கு 11.41% சரிந்தன. எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் ஆகஸ்ட் 2020க்கு பிறகு முதன்முறையாக மிகக்குறைந்த நிலைக்கு சரிந்துள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை டெஸ்லாவின் பங்குகள் 11.41% குறைந்து 109.10 டாலரில் முடிவடைந்தது. நவம்பர் 2021 இல் டெஸ்லா பங்குகள் அதன் அதிகபட்ச உச்ச வரம்பான 407.36 டாலரில் இருந்தது குறிப்பிடத்தக்கது, மேலும் டெஸ்லாவின் மொத்த மதிப்பும் சுமார் 345 பில்லியன் டாலர் […]
டெஸ்லாவின் பங்குகள் சரிந்ததால் உலகின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பில் $100 பில்லியன் இழப்பு. நவம்பர் 2020க்குப் பிறகு டெஸ்லா பங்குகள் மிகக் குறைந்த நிலைக்குச் சென்றதால், உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 2022ல் முதல்முறையாக 100 பில்லியன் டாலருக்கும்(ஏறத்தாழ 8லட்சத்து 17,000 கோடி) அதிகமாகக் குறைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு மஸ்க்கின் சொத்துமதிப்பு $340 பில்லியனுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி […]
டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், கிட்டத்தட்ட $4 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் டெஸ்லா பங்குகளை விற்றுள்ளார். டெஸ்லாவின் தலைமை அதிகாரி மற்றும் ட்விட்டரின் புதிய தலைவர் எலான் மஸ்க், $3.95 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் டெஸ்லாவின் பங்குகளை விற்றுள்ளார். ஏற்கனவே ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் $15.4 பில்லியன் மதிப்புள்ள அதன் பங்குகளை விற்றார், இதன் மூலம் மொத்தமாக டெஸ்லாவின் $20 பில்லியன் பங்குகளை மஸ்க் விற்றுள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் டெஸ்லா பங்குகளை விற்க […]
எலான் மஸ்கின் சட்டையில்லா புகைப்படத்தை ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அதற்கு, எலான் மஸ்க் தனது பாணியில் கருத்து தெரிவித்துள்ளார். உலக பணக்காரர்களின் மிக முக்கிய இடத்தில் இருப்பவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், தன்னுடைய தொழிலில் ஈடுபாடாய் இருப்பது போல , தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் ஈடுபாடாய் இருப்பவர். தனக்கு, தன்னை பற்றி வரும் கருத்துக்களுக்கு பெரும்பாலும் பதில் அளித்து விடுவார். அப்படி தான், ஒரு நபர் , தனது டிவிட்டர் […]
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் முன்னிலையில் உள்ளவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருகிறது என விமர்சித்திருந்த நிலையில்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து,பின்னர் அதை வாங்குவதாக அறிவித்தார்.இதற்காக, 44 பில்லியன் டாலர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில்,முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர்,ஒப்பந்தத்தின் பல விதி முறைகளை மீறியதால் அதனை வாங்குவதற்கான தனது 44 […]
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறார்.அந்த வகையில், ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருவதை விமர்சித்த எலான்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து, பின்னர் அதை 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று கைப்பற்றி,அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.எனினும், ஒப்பந்தம் இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில்,ட்விட்டரை வாங்குவதற்கான […]
டெஸ்லாவின் தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்புங்கள் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட இந்த மெமோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. தொலைதூர வேலையைச் செய்ய விரும்பும் எவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் (அதாவது *குறைந்தபட்சம்*) 40 மணிநேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் அல்லது டெஸ்லாவிலிருந்து வெளியேற வேண்டும். இது தொழிற்சாலை தொழிலாளர்களிடம் நாம் கேட்பதை விட குறைவு. மேலும் ,”இது சாத்தியமற்றது குறிப்பாக விதிவிலக்கான பங்களிப்பாளர்கள் […]
சுமார் ரூ.83,000 கோடி வருமான வரி செலுத்த உள்ளதாக அறிவித்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க். தொழிலதிபர் எலான் மஸ்க் இந்த ஆண்டு 11 பில்லியன் டாலர் (சுமார் ரூ.83,000 கோடி) வரி செலுத்த உள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த வரி தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் செலுத்திய அதிகபட்ச வரியாக அது இருக்கும் என கூறப்படுகிறது. எலான் மஸ்க் தனது முதல் Zip2 நிறுவனத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ், […]
இந்தியாவில் முழுமையாக சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்களை திறக்க மத்திய அரசுடன் டெஸ்லா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் தலைமையிலான மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய கடந்த சில மாதங்களாக பல சாலைத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும்,அதன் வாகனங்களை விற்கவும் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதாவது,இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தனது கார்கள் […]
டெஸ்லா (Tesla) நிறுவனம்,இந்தியாவில்,தனது நான்கு கார் மாடல்களுக்கு இந்தியாவின் சோதனை நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. இந்தியாவில்,பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால்,பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில், எலக்ட்ரிக் வாகனம் மற்றும் கார் தயாரிப்புகளில் உலகளவில் முன்னிலையில் உள்ள நிறுவனமான எலான் மஸ்கின் டெஸ்லா (Tesla) நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையை துவங்க திட்டமிட்டு ,இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தனது கார்கள் மீதான இறக்குமதி வரியை 40% ஆக […]
டெஸ்லா நிறுவனம் தயாரித்த மனிதன் வடிவிலான ரோபோ. இன்று வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள், மனிதனுடைய வேலைகளை இலகுவாக்குகிறது என்றுதான் சொல்லவேண்டும். அந்த வகையில், மனிதனுக்கு ஈடாக செயல்படக்கூடிய மனித ரோபோக்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. டெஸ்லா நிறுவனம் மனிதவடிவிலான ரோபோக்களை தயாரித்து வருவதாக எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். இந்த மனித வடிவ ரோபோவுக்கு டெஸ்லாபோட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ 5 அடி, 8 இஞ்ச் உயரம் கொண்டது. மேலும் அவர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு […]
“உலகிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா” என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெட்ரோல் விலை ரூ. 100 ஐ தாண்டியுள்ளது, மேலும் டீசல் விலை ரூ. 100 ஐ நெருங்கி வருகிறது. இதனால் பலரது வாகனங்களை வெளியில் எடுத்து செல்லமுடியாமல் வீட்டிலேயே வாகனங்களை முடக்கி வைக்கும் நிலை வந்துள்ளது. இதனால் பலரும் சைக்கிளுக்கு மாறி வருகின்றனர். மேலும், […]
டெஸ்லா போட்டியாளரான ட்ரைடன் (ஈ.வி) தெலுங்கானாவில் ரூ.2,100 கோடி முதலீடு செய்வதால் 25,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார். எலோன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ட்ரைடன் (ஈ.வி) ,தெலுங்கானா மாநிலத்தின் சங்கரெட்டி மாவட்டத்தில் 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் தனது உற்பத்தி ஆலையை நிறுவ மாநில அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது தொடர்பாக,தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை அமைச்சர் […]
டெஸ்லா நிறுவனம்,2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1,80,338 வாகனங்களை தயாரித்து 1,84,777 வாகனங்களை விற்பனை செய்ததாகவும்,இதனால்,10.3 பில்லியன் டாலர் சம்பாதித்து வருவாயை உயர்த்தியதாக தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவடைந்த நிலையில்,பல நிறுவனங்கள் தங்கள் வருவாயை கணக்கிட்டு வருகின்றன.அதன் வரிசையில்,அமெரிக்க மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா தனது வருவாயை கணக்கிட்டு கூறியுள்ளது. அதன்படி டெஸ்லா நிறுவனம்,2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1,80,338 வாகனங்களை தயாரித்து 1,84,777 வாகனங்களை 10.3 பில்லியன் […]