Tag: #TerroristsAttack

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தம்பதியினர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜெய்ப்பூரை சேர்ந்த ஃபர்ஹா மற்றும் தப்ரேஸ் ஆகியோர் பயங்கரவாதிகளால் அனந்த்நாக் பகுதியில் தாக்கப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறையினர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர். தற்போது அந்த பகுதி பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

#TerroristsAttack 2 Min Read
Jammu Kashmir

ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை.!

ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவின் தும்சி நவ்போரா பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்தக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து புல்வாமா மற்றும் ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், தொழிலாளி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட இச்சம்பவம் […]

#JammuandKashmir 2 Min Read
TerroristsAttack

ஜம்முவில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்முவில் லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இந்திய பாதுகாப்பு படை. ஜம்மு காஷ்மீர் சித்ரா பகுதியில் லாரியில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் சித்ரா பகுதியில்சோதனையின்போது லாரியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை சுட்டுள்ளனர். இதன்பின் பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் லாரியில் இருந்த 4 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், லாரியில் இருந்து 7 ஏகே47 ரக துப்பாக்கிகள், 3 துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

#GunShot 2 Min Read
Default Image

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழப்பு. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து போலீஸ், பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் தீவிர சோதனையில் […]

#JammuandKashmir 2 Min Read
Default Image