தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு. டெல்லியில் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்கும் வர ஓய மாட்டோம் என தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவியும் ஒருசில நாடுகள் வழங்கி வருகின்றன. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்து இந்தியா எப்போதும் வீரத்துடன் போரிட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்:டெல் அவிவ் நகரின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் பார்கள் மற்றும் உணவகங்களுக்கு பெயர் பெற்ற பரபரப்பான தெருக்களில் ஒன்றான டிசென்காஃப் தெருவில் பல பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை போலீசார் கைது […]
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்க இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல். துஷான்பேயில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டத்தின் போது, உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சர்வதேச பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். உறுப்பு நாடுகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசஃப் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்திய தஜிகிஸ்தான் […]
தீவிரவாதம் குறித்த விவாதம் எப்போது நடைபெற்றறாலும் அதற்கு தான் பலியாகி விட்டதாக பாகிஸ்தான் நாடகமாடி வருவது வாடிக்கையாகி விட்டதாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜ.நா மனித உரிமை கவுன்சிலில் தீவிரவாதம் குறித்த விவாதம் குறித்து வெளியிட்ட ஜ.நாவுக்கான இந்திய செயலர் விமார்ஷ் ஆர்யன்,ஐ.நாவில் கூறியதாவது: பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக சாடினார்.சர்வதேச நாடுகளின் கவனத்தை தவறாக திசை திருப்பும் திட்டத்துடனேயே பாகிஸ்தான் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று கூறிய அவர் சொந்த நாட்டில் […]
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக கூட்டாக அறிக்கை விட்டனர் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் பங்கேற்றுள்ள, 16வது முத்தரப்பு கூட்டம் சீனாவில் உள்ள வூசென் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார். மேலும் அவர் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை […]
பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 2வது ஆண்டாக இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக அமெரிக்க வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் குறித்து அமெரிக்கா ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இதில், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. 2015ம் ஆண்டு வரை இந்த பட்டியலில் பாக்., தான் 3வது இடத்தில் இருந்து வந்தது. இதே போன்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை […]