முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை தேர் விபத்து நிகழ்ந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது, திருவிழா காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூரில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. 11 […]
தஞ்சை தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தஞ்சாவூர் அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவில் பவனி வீதி உலாவின் போது இன்று அதிகாலை 3.10 மணி அளவில் தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் தேரோட்டம் முடிந்து, தேரினை திருப்ப முற்பட்டபோது தேர் கட்டுப்பாட்டினை இழந்து அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பியில் உரசியதாக […]
தஞ்சை தேரோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல். தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 94-வது ஆண்டு சித்திரை தேர் திருவிழாவில் தேர் வரும்போது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதால், அப்போது மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு […]
தேனியில் மங்களதேவி கண்ணகி கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை. இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று தமிழகம் மற்றும் கேரள பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தமிழகம் மற்றும் கேரள பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நாளை நடைபெறும் பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா அன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளுர் […]