இந்து சமய அறநிலையத் துறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக கோயில் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: “கொரோனா தொற்று காரணமாக கோயில்கள் நீண்ட நாட்கள் மூடப்பட்டு இருந்த நிலையில்,தற்போது,கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய […]