தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் தெய்வானை எனும் 25 வயது மதிக்கதக்க யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் பாகனாக உதயகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். இன்று இவரை காண பாகனின் உறவினர் சிசுபாலன் என்பவர் களியக்காவிளை பகுதியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணியளவில், திடீரென கோயில் […]