குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இருவரின் பதவி விலகலையும் ஏற்றுக்கொண்டார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்கிற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்துத் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி ஆகியோர் பதவி விலகல் கடிதங்களைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அளித்தனர். இருவரின் பதவி விலகலையும் ஏற்றுக்கொண்டதாகக் குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். […]
தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்களும் பிரதமர் மோடியின் சமாதான முயற்சியையும் மீறி, தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, பாஜக தலைமையிலான மத்திய அரசில் இருந்து வெளியேற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. புதன் கிழமை கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் இதனை அறிவித்த சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தங்களது கட்சியைச் சேர்ந்த […]