தெலுங்கானாவை சேர்ந்த விவசாயி ரெத்ய நாயக் என்பவர் அறுவை சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை எலிகள் துண்டாடியுள்ளது. தெலுங்கானாவின் மகாபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு காய்கறி விவசாயியான ரெத்ய நாயக் தனது வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, மிகவும் கஷ்டப்பட்டு ரூ.2 லட்சம் பணத்தை சேமித்துள்ளார். இந்த பணத்தை அவர் ஒரு பருத்தி பையில் போட்டு, அலமாரியில் சேமித்து வைத்துள்ளார். இந்த பணம் முழுவதையும் எலிகள் மென்று, துண்டாடி உள்ளது. இதனையடுத்து, அந்த விவசாயி இதுகுறித்து கூறுகையில், […]