ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், இந்த சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிப்பதாக ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் […]
ஆந்திரப் பிரதேசம் : ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடு இன்று அமராவதியில் உள்ள அம்மாநிலச் செயலகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) தலைவர்கள் முன்னிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் 18வது முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். நேற்று முதலமைச்சருடன் 24 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. இதில், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பாஜகவின் எம்எல்ஏக்களும் […]
ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடைபெறும் என தெலுங்குதேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது மேலும் தெலுங்குதேசம் கட்சி மீது கட்சியினர் மீது தொடர் தாக்குதலையும், அரசியல் வன்முறைகளையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறி அதன் பெயரில் இன்று பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று உண்ணாவிரதம் நடக்க இருந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், அவரது […]
இன்று ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 172 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.ஆந்திர சட்டப்பேரவை தொகுதியில் YSR காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 142 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.ஆளும் தெலுங்கு தேசம் கட்சி 29 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.