கொரோனா தடுப்பூசிக்காக ஹைதராபாத்தை உலகம் தேடுகிறது என்று தெலுங்கானா கவர்னர் கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலமான ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐ.சி.எம்.ஆர் எனப்படுகின்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் இணைந்து இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, “கோவாக்சின்” தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தை நேரில் சென்று பார்வையிட்ட தமிழிசை சவுந்தரராஜன். அங்கு அவர் கூறுகையில், திறம்பட்ட கொரோனா தடுப்பூசிக்காக உலகம் […]
தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி பிராமண நிகழ்வு தெலுங்கானா ஹைதிராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலுங்கானா அமைச்சர்கள், தமிழக அமைச்சர்களான ஜெயக்குமார், வேலுமணி தங்கமணி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். […]