இப்போது உள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட்போனைக் கையில் எடுத்தால் கீழே வைக்கப் பலருக்கும் மனமிருப்பதில்லை. இதனால் நேரம் விரயமாவதுடன், வேறு பல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் மோகத்துக்கு செயலிகளும் முக்கியக் காரணம். இந்த மோகத்திலிருந்து மீள செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது. ‘ஹோல்ட்’(Hold) எனும் பெயரிலான இந்தச் செயலி(app), ஸ்மார்ட்போனைக் கையில் எடுக்காமல் இருந்தால், அதற்குப் பரிசாகப் புள்ளிகள் வழங்குகிறது.மேலும் அப்புள்ளிகளைக் கொண்டு விரும்பியதை வாங்கவும் செய்யலாம். 20 நிமிடம் போனைப் பயன்படுத்தாமல் இருந்தால், குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறலாம். […]