சஞ்சித் யாதவை கடத்தி கொலை செய்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி அபர்ணா குப்தா மற்றும் துணை எஸ்பி மனோஜ் குப்தா ஆகியோரை இடைநீக்கம் செய்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். லேப் டெக்னீசியன் சஞ்சித் யாதவ் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி பிபி ஜோக்தாண்டை கடந்த ஜூன் 22-ஆம் தேதி விசாரிக்குமாறு அரசு அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்றது .இந்த வழக்கில் இறந்தவரின் நண்பர்கள் உட்பட ஐந்து பேரை கைது […]