அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக பள்ளி,கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக பாடம் படித்து வருகின்றனர். இந்நிலையில்,கல்லூரிகளின் புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ நிர்வாகம் திருத்தி வெளியிட்டுள்ளது.அதன்படி, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், முதுகலை மேலாண்மை நிறுவனங்கள், தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை அங்கீகாரத்தைப் பெற ஜூன் 30 கடைசித் தேதி ஆகும். […]