இப்போது உள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட்போனைக் கையில் எடுத்தால் கீழே வைக்கப் பலருக்கும் மனமிருப்பதில்லை. இதனால் நேரம் விரயமாவதுடன், வேறு பல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் மோகத்துக்கு செயலிகளும் முக்கியக் காரணம். இந்த மோகத்திலிருந்து மீள செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது. ‘ஹோல்ட்’(Hold) எனும் பெயரிலான இந்தச் செயலி(app), ஸ்மார்ட்போனைக் கையில் எடுக்காமல் இருந்தால், அதற்குப் பரிசாகப் புள்ளிகள் வழங்குகிறது.மேலும் அப்புள்ளிகளைக் கொண்டு விரும்பியதை வாங்கவும் செய்யலாம். 20 நிமிடம் போனைப் பயன்படுத்தாமல் இருந்தால், குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறலாம். […]
கூகுள் சமீபத்தில் (கடந்த ஆண்டு) அறிமுகப்படுத்திய Android Instant Apps அடிப்படையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது, கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்களின் எதிரே காணப்படும் Try Now பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் செயலியை பயன்படுத்தி பார்க்கலாம் இன்ஸ்டால் பண்ணாமலே. தேவையென்றால் உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். முன்னர்போல முழுமையாக டவுண்லோடு செய்தபின் பயன்படுத்திப் பார்க்க நேரிடும் நேட்டிவ் ஏப்ஸ் (Native Android Apps) போலன்றி, உடனடியாக ஒரு செயலியை அதன் URL -யை கிளிக் செய்தாலே […]